யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஏ9 வீதி நுணாவில் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு(23) 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளன.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் இராசசிங்கம் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து கனரக வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள சாவகச்சேரி பொலிஸார்,சந்தேக நபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

உணவு ஒவ்வாமையால் 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை!
கொழும்பு – காலிமுகத்திடல் நீராடிய மாணவர்களில் ஒருவர் பலி: இன்னொருவர் மாயம்!