வடக்கு மாகாண கயிறு இழுத்தல் போட்டியில், யாழ்.மாவட்ட அணி வெற்றிபெற்று தேசிய போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
கயிறு இழுத்தல் போட்டியில் தொடர்ச்சியாக முன்னணியில் இருந்த வவுனியா அணியை வென்றதன் மூலம் யாழ்ப்பாண அணி தேசியப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
அந்த வகையில் மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டி,பல சுற்றுக்களாக இடம்பெற்று இறுதிப் போட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம் பெற்றது.
இதில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி அணியினரும்,
மன்னார் – வவுனியா அணியினரும் போட்டியிட்டு இறுதிப்போட்டிக்கு
யாழ்ப்பாணம் வவுனியா அணிகள் தெரிவாகின.
அந்த இறுதிப் போட்டியில், யாழ்ப்பாண கயிறு இழுத்தல் அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!
செம்மணி மனித புதை குழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு!