2026 ஃபிஃபா உலகக் கிண்ண போட்டியில் அர்ஜென்டீனாவின் நட்சத்திர வீரர் அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி ஹெட்ரிக் கோல் அடித்து சாதனையைப் படைத்துள்ளார்.
குரூப் ‘ஜே’ லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டீனா அணி, அல்ஜீரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே அர்ஜென்டீனா அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை தேடித்தந்தார்.
இதனைத் தொடர்ந்து, அல்ஜீரிய அணியினர் பதிலடி கொடுக்க முயன்றபோதிலும், அர்ஜென்டீனாவின் பலமான தடுப்பாட்டத்தை அவர்களால் மீற முடியவில்லை.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் முழு வீச்சில் விளையாடிய மெஸ்ஸி, 60-வது மற்றும் 76-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்து தனது ஹெட்ரிக் சாதனையைப் பதிவு செய்தார்.
முடிவில், அர்ஜென்டீனா 3-0 என்ற கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைவியாக ஸ்மிருதி மந்தனா நியமனம்!
ஆசிய கிரிக்கட் போட்டியில் தங்கம் வென்ற அணியிலுள்ள தமிழக வீரருக்கு 75 இலட்சம் சன்மானம், தமிழக முதல்வர் அறிவிப்பு!
ஆசிய விளையாட்டு விழாவின் கிரிக்கெட் போட்டியில் காலிறுதியில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ருமேஸ் தரங்க!