8 விக்கெட்களால் வெற்று, தொடரை சமன் செய்த பாகிஸ்தான்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான ரெஸ்ட் தொடர் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நிறைவடைந்த 2ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்களால் வெற்றி பெற்றதன் மூலம் போட்டியில் சமன் செய்துள்ளது.

இந்தப் போட்டியில், 75 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இரண்டு விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்கள் பெற்று பாகிஸ்தான் அணி வெற்றியிலக்கை அடைந்தது.

அந்தவகையில், இரு போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் நிறைவடைந்துள்ளது.

அத்துடன், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி 8ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Exit mobile version