FIFA உலகக் கிண்ண குழு C போட்டியில், பிரேசில் அணி ஹைட்டியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடரின் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்தப் போட்டி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் இலங்கை நேரப்படி இன்று(20) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றது.


போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணிக்காக மத்தியூஸ் குன்யா இரண்டு கோல்களை பெற்றுக்கொடுத்தார்.
தொடர்ந்து வினிசியஸ் ஜூனியர் ஒரு கோலை அடித்து அணியின் வெற்றியை மேலும் உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி குழு C இல் முக்கிய மூன்று புள்ளிகளைப் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பலப்படுத்தியுள்ளது.
மறுபுறம், தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்த ஹைட்டி அணி உலகக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறும் முதல் அணியாகியுள்ளது.

ஐந்து ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சமரி அத்தபத்து சாதனை!
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்ட இலங்கை அணி!
பெர்லின் மரதன் போட்டியில் இருந்து செபஸ்டியன் சாவே விலகல்