FIFA உலக கிண்ண இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு அமெரிக்க ‘செம்பியன்ஷிப் மோதிரங்கள்’ வழங்கப்படவுள்ளன.
அமெரிக்க இதுவரை செம்பியன்ஷிப் மோதிரங்களை ஏனைய விளையாட்டுக்களுக்கு வழங்கிவந்த நிலையில், இம்முறை கால்பந்தாட்டத்திற்கும் வழங்கவுள்ளது.
உலக கிண்ணத்தை வெல்லும் அணியினருக்கு 30 மோதிரங்களும், ரசிகர்களின் விற்பனைக்காக 1,996 மோதிரங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மோதிரத்திலும் கால்பந்து செம்பியன்ஷிப்பின், சிறிய வடிவம் மற்றும் சிறப்பான பொறிப்புகள் இடம்பெறுகின்றன.
அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் FIFA உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டி, நாளை(19) ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க்கிலுள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இறுதிப்போட்டியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டுகளிப்பார் என வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐந்து ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சமரி அத்தபத்து சாதனை!
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்ட இலங்கை அணி!
பெர்லின் மரதன் போட்டியில் இருந்து செபஸ்டியன் சாவே விலகல்