2026 FIFA உலக கிண்ண போட்டியில் கனடா அணி கட்டார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் 16வது நிமிடத்தில் கனடாவின் சைல் லாரின் கோல் ஒன்றை அடித்தார்.



அதனைத் தொடர்ந்து, அதே அணியின் ஜோனதன் டேவிட் 29 மற்றும் 45+3வது நிமிடங்களில் கோல்கள் அடித்தார்.
இரண்டாம் பாதியின் 64வது நிமிடத்தில் நேதன் சலிபா (கனடா) கோல் அடிக்க, 75வது நிமிடத்தில் கத்தார் வீரர் மொகம்மது மானையின் கோல் தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனால் அது சுயகோலாக மாற, கனடா அணிக்கு 5வது கோல் கிடைத்தது.
ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் (90+2) ஜோனதன் டேவிட் (Jonathan David) கோல் அடிக்க, கனடா அணி 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

ஐந்து ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சமரி அத்தபத்து சாதனை!
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்ட இலங்கை அணி!
பெர்லின் மரதன் போட்டியில் இருந்து செபஸ்டியன் சாவே விலகல்