FIFA கால்பந்தாட்டப் போட்டியில்,ஜெர்மனி 7 கோல்கள் அடித்து வரலாற்று சாதனை!

2026 FIFA உலகக் கோப்பையின் குரூப் ‘E’ பிரிவு போட்டியில் வாய்ந்த ஜெர்மனி அணி, குராசோ அணியை 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

போட்டி தொடங்கிய 6வது நிமிடத்திலேயே ஜெர்மனியின் பெலிக்ஸ் நமேச்சா முதல் கோலை அடித்தார்.


தொடர்ந்து நதானியேல் பிரவுன், டெனிஸ் உந்தாவ், ஜமால் முசியாலா, நிகோ ஷ்லோட்டர்பெக் ஆகியோர் தலா ஒரு கோலும், நட்சத்திர வீரர் கை வெர்ட்ஸ் இரண்டு கோல்களும் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

போட்டியின் 21வது நிமிடத்தில் குராசோ அணியின் லிவானோ கொமெனென்சியா அடித்த கோல் மூலம் ஆட்டம் 1-1 என தற்காலிகமாக சமநிலையை எட்டியது.

உலகக் கிண்ண வரலாற்றில் குராசோ அணி பதிவு செய்த முதல் கோல் இது என்பதால், தோல்வியிலும் அந்த அணிக்கு இது வரலாற்றுத் தருணமாக அமைந்தது.

இந்த அதிரடி வெற்றியின் மூலம் 3 புள்ளிகள் மற்றும் +6 கோல் வித்தியாசத்தில் ‘E’ பிரிவில் ஜெர்மனி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Exit mobile version