புதிய ‘மெட்ரோ’ பேருந்துகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது வரி செலுத்துவோர் மீது மேலதிக சுமையைச் சுமத்தும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
மெட்ரோ
பேருந்துகள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதாகவும், அவை தனியார் வாகனங்களைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளை ஈர்க்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மெட்ரோ பேருந்துகள் வழமையான பேருந்துகளை விட அதிக டீசலை நுகர்கின்றன எனவும், இத்திட்டத்தால் ஏற்படும் இழப்புகளை இறுதியில் பொதுமக்களே சுமக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், மெட்ரோ பேருந்து சேவையின் செயல்பாடு மற்றும் நிதிசார் சாத்தியக்கூறுகள் குறித்து வெளிப்படைத்தன்மை தேவை எனவும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஐயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !