எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை எனவும்,அதை அரசு உடனடியாக இரத்துச் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தினர் கையெழுத்துப் போராட்டத்தில் இன்று (19) ஈடுபட்டுள்ளனர்.


இந்த கையொழுத்துப் போராட்டம் யாழ் பல்கலைக்கழக மூன்றலில் இடம்பெற்று வருகிறது.
இன்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், தொடர்ந்து நான்கு நாள்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில், பல்கலைக்கழக ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளன.


யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்றிலிருந்து நான்கு நாட்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ள நிலையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !