புத்தளம் வனாத்தவில்லு, மங்களபுர பகுதியில் அமைந்துள்ள ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச்சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மலர்களைப் பறிப்பதற்காகத் தெப்பத்தில் ஐந்து மாணவர்கள் நேற்று(30) நண்பகலில் சென்றுள்ளனர்.
இதன்போது தெப்பம் கவிழ்ந்ததில் மாணவர்கள் நீரில் மூழ்கினர்.


அவர்களில் ஒரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய நான்கு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!
செம்மணி மனித புதை குழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு!