இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்தில் வைத்தே குறித்த நபர் இன்று (17) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைதானவரிடமிருந்து 12 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான நபர் கம்பளையைச் சேர்ந்த 58 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !