கட்டைக்காட்டுக் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் சட்ட விரோதமான முறையில் உழவு இயந்திரங்களை பாவித்து கரைவலை தொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (04) இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட அறுவரும், கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதோடு, உழவு இயந்திரங்கள் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version