யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் திடீர் தீ விபத்து காரணமாகப் பெருமளவிலான சொத்துக்களுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து நேற்று மாலை (24) ஏற்பட்டுள்ளது.


பழைய இரும்புகளை அகற்றும் பணி தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் நடைபெற்று வந்த நிலையில்
இரும்புகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சிலிண்டரின் எரிவாயுவில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலை வளாகத்தில் தங்கியிருந்த இராணுவத்தினரின் தங்குமிட பகுதிக்கும் மிக வேகமாகப் பரவியுள்ளது.
இதனால், அங்கு வைக்கப்பட்டிருந்த இராணுவப் பணியாளர்களின் உடைகள், மெத்தைகள் மற்றும் பாதுகாப்புப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்புப் படையினர், இராணுவத்தினருடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தத் விபத்தில் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !