கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இன்று(25) இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், வடக்கு மாகாண ஆளுநருமான நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், வன ஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களது காணிகள்,
விவசாய நிலங்கள், அரச தேவைக்கான காணிகள் குறித்து வினவப்பட்டதோடு, அவற்றை பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும்,அனர்த்த தணிப்பு செயற்திட்டங்கள், கிராமிய வீதிகள் மற்றும் பாலங்கள் புனரமைப்பு,
கௌதாரிமுனை சுற்றுலா அபிவிருத்தி
தொடர்பாகவும்,
டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கல், மக்களுக்கான காணி ஆவணங்கள் வழங்கல், காணிப் பிணக்குகளை தீர்த்தல், சட்டவிரோத மண் அகழ்வு ஆகிய விடயங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் யாழ் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !