சந்நிதியான் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று(12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மே 12 தொடக்கம் 18 வரை முள்ளிவாய்க்கால் வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

யுத்த இறுதி நேரத்தில் முள்ளிவாய்க்காலில் கஞ்சியை மட்டுமே மக்கள் குடித்து தமது உயிர்களை காத்துக்கொண்டனர்.

அதனை நினைவு கூரும் முகமான கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது.

அதற்கமைய தெண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று பரிமாறப்பட்டது.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறினர்.

Exit mobile version