“சிவபூமி சிறுவர் மன விருத்திப் பாடசாலை” யாழ்.சாவகச்சேரி வேலாயுதம் வீதியில் இன்று(28) திறந்து வைக்கப்பட்டது.



இந்த நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, சாவகச்சேரி நகரசபை தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஸ், வைத்திய கலாநிதி கமலா அருணாசலம் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



தென்மராட்சி பிரதேசத்திலுள்ள பிறப்பிலே மன வளர்ச்சி குன்றிய மாணவர்களின் நன்மை கருதி இந்தப்பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, 2003 ஆம் ஆண்டு கோண்டாவிலும், 2016 ஆம் ஆண்டு கிளிநொச்சியிலும் இவ்வகைப் பாடசாலைகள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !