யாழ் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய சுகாதாரத் தொண்டர்கள், யாழ். போதன வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதாரத் தொண்டர்கள் இன்று (05) காலை 8:30 மணி முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.



சுகாதார உதவியாளர் நியமனத்தின் போது சுகாதாரத் தொண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சுகாதார அமைச்சர் வாக்குறுதி அளித்திருந்த போதிலும்,
தற்போது இடம் பெற்றுவரும் சுகாதார உதவியாளர் நேர்முக தேர்வில் தொண்டர்கள் அழைக்கப்படவில்லை எனத் தெரிவித்தே சுகாதாரத் தொண்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் போரட்ட இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாக கருணைநாதன் இளங்குமரன்,ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடினர்.




நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !