சுவிட்சர்லாந்தில் வீடு தட்டுப்பாட்டுக்கு வருகிறது வழி!

சுவிட்சர்லாந்தில் நிலவும்
வீடுகள் தட்டுப்பாட்டைத் தீர்க்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது.

ஒரு புறம் வீடுகளுக்கு தட்டுப்பாடு காணப்படும் நிலையில், இன்னொரு புறம் பெரிய வீடுகளில் முதியவர் ஒருவர் அல்லது முதிய தம்பதியர் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

பெரிய வீடுகளில் வாழும் முதியவர்கள்
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின் பிறந்த தலைமுறையினர்.

அவர்கள் ‘பேபி பூமர்’ தலைமுறையினர் (baby boomer generation) என அழைக்கப்படுகின்றனர்.

சுவிட்சர்லாந்திலுள்ள இந்த பேபி பூமர் தலைமுறையினர், பெரிய பெரிய வீடுகளில் தனியாக வாழ்ந்துவருகிறார்கள்.

அவ்வகையில், சுமார் 3 இலட்சம் தனி வீடுகள் முதியவர்களால் பயன்படுத்தப்பட்டுவருவதாக ஃபெடரல் வீட்டு வசதி அலுவலகம் தெரிவிக்கிறது.

இன்னொரு புறம் வீடுகள் தட்டுப்பாடு காரணமாக பலருக்குவீடுகள் கிடைப்பதில் பிரச்சினை இருந்து வருகிறது.

ஆக, அப்படி பெரிய பெரிய வீடுகளில் தனியாக வாழும் முதியவர்களை, தங்கள் வீடுகளை விட்டு விட்டு, அவர்களுடைய வயதுக்கு ஏற்ற வீடுகளில் குடியேறச் செய்வது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அது குறித்து தேசிய அளவில் ஆய்வொன்று துவக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டின் இறுதியில் அந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகவுள்ளன.

Exit mobile version