Vijay TV யில் ஒளிபரப்பாகி வரும் Super singer Season 11 இல் கலந்து கொண்ட ஈழத்துக் குயில் டிசாதனா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் தனது திறமையான மற்றும் தனித்துவமான குரல் வளத்தால் ரசிகர்கள் மற்றும் நடுவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

அதனால், Season 11 இன் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வாகினார்.
இவரது தாயார் உள்நாட்டு போர் காரணமாக 12 வயதில் இந்தியா சென்றார்.
தமிழ் நாட்டிலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் டிசாதனா பிறந்தார்.

டிசாதனா, நேற்று(01) நடைபெற்ற இறுதிச் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பெற்று 10 லட்சம் ரூபா பரிசுத் தொகையையும் வென்றுள்ளார்.
அவரது வெற்றி ஈழத் தமிழர்களை மட.டுமல்லாது உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !