செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டப் பேரணி:ஐநா அலுவலகத்தில் மகஜரும் கையளிப்பு!

யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டத்தின் இறுதிநாளான இன்று (17) ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் செம்மணிச் சந்தியில் இரவு பகலாக நான்கு நாட்களாக இடம்பெற்றது.

அந்த நிலையில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டத்தின் இறுதிநாளான இன்று ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

போராட்டக் காரர்கள், யாழ்.பொது நூலகத்திலிருந்து பேரணியாக மணிக்கூட்டு வீதிவரை சென்று அங்கிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக வேம்படிச் சந்தியை வந்தடைந்தனர்.

பின்னர் கோயில் வீதியூடாக பயணித்து நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள ஜநா அலுவலகம் வரை சென்றனர்.

அங்கு ஐநா பிரதிநிதிகளிடம் மகஜர் ஒன்றையும் போராட்டக்கார்கள் கையளித்தனர்.

இந்தப் போராட்டத்தில், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Exit mobile version