இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின்பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
இந்தியாவில் இடம்பெறும், AI Impact Summit 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
செயற்கை நுண்ணறிவை(AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வோடு பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 19ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.
ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !