மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு அனர்த்தத்தை அரசாங்கம் காரணம் காட்டக்கூடும் என ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றஞ்சாட்டினார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இன்றைய கால கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இடங்கள் மற்றும் அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஆகவே தேர்தலை நடத்த முடியாது எனக் கூறுவார்கள்.
குறைந்தபட்சம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதன் மூலம் தான் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற அழிவுகளை நிவர்த்தி செய்ய முடியும்.
நாங்கள் எல்லாத் தேவைகளுக்கும் அரசாங்கத்தை நம்பியிருக்க தேவையில்லை, புலம்பெயர் தேசத்தில் வாழும் மக்கள் எமக்கு உதவக் காத்திருக்கிறார்கள்.
தமிழ் நாடு முதல்வரும் உதவி புரிவதாக கூறியுள்ளார்” -என்றார்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !