யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வாயில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாயிலான ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு’ இன்றைய தினம் (06) திறந்து வைக்கப்பட்டது.



சட்டநாதர் சிவன் ஆலயத்திலிருந்து இன்று காலை 10.30 மணியளவில்
சமய அனுஷ்டானங்களோடு,நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் புறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணியளவில் நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தோடு காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாக செல்ல, ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு’ திறந்து வைக்கப்பட்டது.



யாழ்ப்பாண கந்தபுராண மரபையும், கலாசாரப் பாரம்பரியத்தையும் எடுத்தியம்பும் வகையில் இவ்வளைவு வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !