18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை பிணையில் விடுவிக்குமாறு ஊவா மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டிற்கமைய பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் நாடாளுமன்ற உறுப்பினரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் இரு அதிகாரிகளை வீதியில் மறித்து தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு கடந்த மாதம் 28 ஆம் திகதி 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சமிந்த விஜேசிறிக்கு மேலதிகமாக அவரது சாரதியான பந்துல ரத்நாயக்க என்பவருக்கும் ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை நீதிமன்றத்தில் தெரியவந்தது.
2019 பெப்ரவரி 10ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் பண்டாரவளை நகரில் இரு பொலிஸ் அதிகாரிகள் பயணித்த ஜீப் வண்டியை மறித்து அவர்களை தாக்கியமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பாக சமிந்த விஜேசிறி உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !