நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
5 சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளுமே கொல்லப்பட்டுள்ளனர்.



மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறையிலுள்ள விளக்கமறியல் கைதிகளுக்கும் தண்டனை பெற்ற கைதிகளுக்கும் இடையே போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக நேற்று (05) பிற்பகலில் மோதல் வெடித்துள்ளது.
அதில் முதற்கட்டமாக 2 கைதிகள் பலியாகியிருந்தனர்.



நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்று ( 6) காலை கைதிகள் சிறை அதிகாரிகள் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்தியுள்ளனர்.
வன்முறை தீவிரமடைந்ததை அடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் (STF) துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
உயிரிழந்த பலரது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலையைச் சுற்றி வளைத்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
வன்முறை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவின் பேரில் சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த வன்முறை குறித்து உடனடி மற்றும் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !