நடைபெற்றுவரும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கும் தோற்றும் மாணவர்களுக்காக, அவசர தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டில் சீரற்ற வானிலை நிலவும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சீரற்ற வானிலை அல்லது பேரிடர்களால் பாதிக்கப்படக்கூடிய பரீட்சார்த்திகள் அவசர தொடர்பு எண்களின் ஊடாக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாதாரண தரப் பரீட்சை காலத்தில் பேரிடர் அல்லது சீரற்ற வானிலை காரணமாக அவசர நிலைகளை எதிர்கொள்ளும் பரீட்சார்த்திகளுக்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளது.
மேலும் நிலையான தொலைபேசி இலக்கங்களான
011 3 66 80 20,
011 3 66 81 00,
011 3 66 80 13 மற்றும்
011 3 66 80 10 ஆகிய இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !