O/L பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று கேகாலையில் இடம்பெற்றுள்ளது.
16 வயதுடைய மாணவியே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளார்.
மாணவர்களின் வாழ்வில் முக்கியமான கட்டமாக கருதப்படும் O/L பரீட்சை நாளில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்நாளில், தாய்மையின் புதிய பயணத்தை ஆரம்பிக்கவும் நேர்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் அனைவரையும் கவலையிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

பாடசாலை மாணவன் ஒருவருடன் குறித்த மாணவிக்கு காதல் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அதன் மூலமாகவே மானவி தாய்மை அடைந்துள்ளார்.
இந்த நிலையில்,குழந்தை பிரசவித்த மாணவி O/L பரீட்சை எழுதுவதற்காக வைத்தியசாலையில் இருந்து பரீட்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
அதனையடுத்து காதலனான மாணவனை தேடி விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பள்ளிப் பருவத்தில் நோக்கத்தை மறந்து பயணிக்கும் மாணவர்கள் தங்களது வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறார்கள்.
அதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக அமைகிறது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !