பிலிப்பைன்ஸ் நாட்டின் துணை ஜனாதிபதி சாரா டுடெர்ட்டேவுக்கு எதிராக அந்தநாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை இரண்டாவது முறையாக பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இதன் மூலம் அவர் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேற்று(11) நடைபெற்ற வாக்கெடுப்பில் சபையில் இருந்த 290 உறுப்பினர்களில் 255 பேர் சாராவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இந்த எதிரான வாக்களிப்பு மூன்றில் இரண்டு வீத வாக்குகளை விட மிக அதிகமாகுமாக அமைந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டேவின் மகளான சாரா டுடெர்ட்டே மீது அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் தற்போதைய ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், அவரது மனைவி மற்றும் உறவினரான முன்னாள் சபாநாயகர் ஆகியோருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தமை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2025 ஆம் ஆண்டிலும் இதே காரணங்களுக்காக அவர் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஆனால் அப்போது தொழில்நுட்பக் காரணங்களால் உயர் நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது.
தற்போது மீண்டும் அந்த வழக்கு வலுப்பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் தீர்மானம் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த வழக்கு இனி செனட் சபைக்கு விசாரணைக்குச் செல்லவுள்ளது.
செனட் சபையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சாரா டுடெர்ட்டே தனது பதவியை இழப்பதோடு எதிர்காலத்தில் எந்தவொரு பொதுப் பதவியையும் வகிக்க முடியாதவாறு தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

துபாய் வாகன விபத்தில் 7 இந்தியர்கள் பலி!
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்:மூன்று பேர் பலி!
எதியோப்பியாவில் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவரும் மீட்பு!
போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதாக ஈரான் கண்டனம்!