யாழ்ப்பாணம் – வேலணை – புங்குடுதீவு வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களோடு நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுற்றை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிஸா மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு பகுதியில் அண்மைக்காலமாக வன்முறை கும்பலை சேர்ந்தவரின் அச்சுறுத்தல் அதிகரித்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக பலதரப்பட்டவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு வாள்கள் மற்றும் ஒரு அபாயகரமான கோடாலி உட்பட சில பொருட்களும் மீட்க்கப்பட்டுள்ளன.
கைதானவர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !