எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் ஒரே பொலிஸ் நிலையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற முடியாது. அதற்கு முறையாக இடமாற்றம் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பகுதியில் பணியாற்றுவதன் மூலம் அதிகாரிகளுக்கும் அந்தப் பகுதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கும் இடையே நட்பை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

அதனைத் தவிர்ப்பதே இந்த முடிவின் முக்கிய நோக்கம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய பொலிஸ் இடமாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், “மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய அனைத்து அதிகாரிகளும் குற்றவாளிகள் என்று அர்த்தமல்ல.
பொலிஸ் பிரிவுகளில் பொதுமக்களிடையே பிரபலமான பல மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் இருப்பதால், இந்த இடமாற்றங்களை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.” – என்றார்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !