மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் நிர்மாண பணிகளை ஆரம்பித்து வைத்த பிரதியமைச்சர் முனீர் முளப்பர்!

யாழ்ப்பாணம் – வேலணை – மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (02) பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.

சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன்,கருணைநாதன் இளங்குமரன், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்புனர் எம்.பைசல் ஆகியோரும்,

வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், வேலணை பிரதேச செயலாளர் த. அகிலன்,
வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

Exit mobile version