காணாமல் போயிருந்த வவுனியா மாநகர சபையின் செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வவுனியா மாநகர சபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை என்பன காணாமல் போனதாக சபையின் செயலாளரால் வவுனியா தலைமை காவல் நிலையத்தில் கடந்த செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.


குறித்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் வவுனியா – ஓயார் சின்னக்குளம் பகுதியில் இருந்து மாநகர சபைக்குரிய செங்கோலை மீட்டெடுத்தனர்.
முன்னாள் மேயர் அதனை வழங்குமாறு கூறியதாக குறிப்பிட்டு அவருடைய நண்பர் ஒருவர் அங்கு கொண்டுவந்து செங்கோலை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அங்கு கைப்பற்றப்பட்ட செங்கோல் வவுனியா நீதிமன்றில் நேற்று (02) காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !