இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமா மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று(31) இடம்பெற்றது.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குறித்த திருவுருவச் சிலை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மறவன் புலவு சச்சிதானந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாவை சேனாதிராசாவின் குடும்பத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.


நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !