சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் மீண்டும் நாளை திறக்கப்படும் என மத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த இரண்டு மாவட்டங்களிலும் பல பகுதிகளில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வந்தது.
தற்போது காலநிலை படிப்படியாகச் சீரடைந்துள்ளதைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையின் போது மாணவர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளை முதல் வழமையான கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !