யாழ்.சாவகச்சேரி ஏ9 வீதி நுணாவில் பகுதியில் பாரவூர்தி,கார், மோட்டார் சைக்கிள் ஆகியன மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்து நேற்றிரவு (05) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த பாரவூர்தியோடு, பின்னால் வந்த கார் மோதியுள்ளது.
அதனைத் தொடர்ந்து முந்த முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும், காரின் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ். பருத்தித்துறை வீதியில் நேற்று(05) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் வீதியை கடக்க முற்பட்டபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டுள்ளார்.
நல்லூரைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !