யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கைத்தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபயசிங்க இன்று (17) கலந்து கொண்டார்.
அதற்கமைய, சாவகச்சேரி – கோயிற் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட வீடொன்றையும்,


மீசாலை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் அமைக்கப்பட்ட வீடொன்றையும் அமைச்சர் பயனாளிகளிடம் கையளித்தார்.
அதனைத் தொடர்ந்து மந்துவில் கிழக்கு கிராம செயலாளர் பிரிவிலுள்ள ‘உன்னிய வயல்’ வாய்க்கால் புனரமைப்புக்கான அடிக் கல்லையும் அமைச்சர் நாட்டி வைத்தார்.
தொடர்ந்து மிருசுவில், சாவகச்சேரி மற்றும் கைதடி ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வட்டார சபைகள் அமைக்கும் நிகழ்வுகளிலும் பிரதி அமைச்சர் சந்துரங்க அபேசிங்க கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ், தேசிய மக்கள் சக்தியின் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !