யாழ்.கொடிகாமம் ஏ9 வீதி நாவலடிப் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(17) இரவு 8.50 மணியளவில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பயணிகள் பஸ்ஸை முந்தி செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் நேரெதிரே வந்த உழவு இயந்திரத்துடன் மோதுண்டு,பி்ன்னர் செகுசு பஸ்ஸிசுடன் மோதுண்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த கொடிகாமம் தாவளை இயற்றாலையை சேர்ந்த 40 வயதுடைய இரத்தினராசா றஜிகாந்தன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து சொகுசு பயணிகள் பேருந்து நிறுத்தாமல் சென்றுள்ளது.
உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, செகுசு பஸ்ஸின் சாரதியை கைது செய்ய கொடிகாமம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !