நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் மேற்கொண்டு வரும்பணிப் புறக்கணிப்பு இரண்டாம் நாளாக இன்றும்(24) தொடர்கிறது.
நேற்று(23) காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகிய போராட்டம், தொடர்ந்தும் இன்றைய தினமும் நடைபெறுகிறது.
சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு இடம்பெற்றுவருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.
பணிப் புறக்கணிப்பு காரணமாக, யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுகள் இயங்கவில்லை. அதனால் தொலை தூரங்களிலிருந்து வருகைதரும் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !