video click….
நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



இன்று(23) காலை 8.00 மணி முதல் 48 மணித்தியால பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.



சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு இடம்பெற்றுவருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.



இதன்காரணமாக, யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு இயங்கவில்லை. அதனால் தொலை தூரங்களிலிருந்து வருகைதந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு திரும்புச் சென்றனர்.



நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !