யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருத்தந்தை 14ஆம் லியோவால் இந்த நியமனம் இன்று (29) வழங்கப்பட்டுள்ளது.
1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித், 2000ஆம் ஆண்டு கொழும்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
உரோமில் இறையியல் பட்டத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் இளங்கலைப் பட்டத்தையும், கொழும்பில் கல்வியியல் டிப்ளோமாவையும்,
ஐக்கிய இராச்சியத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ், கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 29ஆம் திகதி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
2024ஆம் ஆண்டு ஆவணி 19ஆம் திகதி மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும், நியமனம் பெற்று பணியாற்றிவருகின்றார்.
தற்போதைய ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ஓய்வு காரணமாக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக பணியாற்றிந இவர் யாழ். மறைமாவட்ட ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !