வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Northern International Trade Exhibition) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தில் இன்று(28) ஆரம்பித்து வைக்கப்பட்டது.



வடக்குக் கைத்தொழில் சம்மேளனத்தின் (Northern Chamber of Industries) ஏற்பாட்டில் இடம்பெறும் இந்தக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு இன்று காலையில் இடம்பெற்றது.



வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் எஸ். ஸ்ரீ சாய் முரளி, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே. விவேகானந்தன், யாழ் மாநகர முதல்வர் வி. மதிவதனி,
ஜேர்மன்–ஆசிய பசுபிக் வர்த்தக சங்கத்தின் (OAV) வர்த்தக அபிவிருத்தி நிபுணர் மிரியம் ஹேகர் ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.



இந்தக் கண்காட்சியின் மூலம் வடக்கு மாகாணத்தின் தொழில்துறை, வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில் முயற்சியாளர்களின் வாய்ப்புகளை சர்வதேச ரீதியில் முன்னிலைப்படுத்தும் முயற்சியாக இது அமைந்துள்ளது.




நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !