வெளிவந்துள்ள க. பொ.த.சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில்
வடக்கு மாகாணத்திலிருந்து தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.
அதற்கமைய, வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றுள்ளனர்.

மேலும், இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 627 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
அத்துடன், அகில இலங்கை ரீதியான மாகாண மட்ட அடைவு நிலைகளின் அடிப்படையில், இம்முறை வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 8ஆம் இடத்தைப் பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், வடக்கு மாகாணம் 69.87 சதவீதத் தேர்ச்சியோடு தேசிய மட்டத்தில் 9ஆம் இடமாகிய இறுதி இடத்தில் இருந்தது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !