இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வின் வடக்கு மாகாண நிகழ்வு யாழ்.கைதடியிலுள்ள வடக்கு மாகாண கட்டடத் தொகுதியில் இன்று(04) இடம்பெற்றது.



இந்த நிகழ்வில்,வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேநாயகன், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தலைவர் சாய் முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு பிராந்திய கடற்படைகளின் கட்டளைத்தளபதி, யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி கே.ரி.பி.டி.சில்வா, வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி, முப்படைகளின் அதிகாரிகள்,அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையோடு சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாகின.





தேசியக் கொடியை வடக்கு மாகாண ஆளுநர் ஏற்றிவைத்து சுதந்திரதின உரை நிகழ்த்தினார்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !