நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் சின்னக்கடை சந்திக்கு அருகில் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள் , சபை நாகரீகமின்றி செயற்படுதல் , கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அருச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில்,
தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் நேற்று(19) மிக மோசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
இவ்வாறான நிலையில் , நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, பிரதான வீதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெண்கள் உதைபந்துப் போட்டியில், மகாஜன கல்லூரி அணிகள் சம்பியன்!
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே புதியதொரு நேரடி விமான சேவை!
வடக்கு மீனவர்களுக்கு படகுகள் வழங்கி வைப்பு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது!