இலங்கை சம சமாஜவாய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் இறுதிச் சடங்கு, நாளை மறுநாள் (16) பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.
அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக நாள் முழுவதும் பொரளையிலுள்ள என்.எம். பெரேரா மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று (13) கோட்டே, நாவல வீதியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். உயிரிழக்கும்போது அவருக்கு வயது 92 ஆகும்.

குவைத் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் தொழிலாளி ஒருவர் பலி!
காஸாவில் 60 ஆயிரம் சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர்: காஸா சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: ஐவர் காயம்!
‘சூரிச்’ சிவன் ஆலயத்தால் இடம்பெற்ற தமிழகரன் சனாவின் ஆன்மிக சொற்பொழிவு!