உலகம்
Trending

நேபாளத்தின் முன்னாள் அமைச்சர் விஷ்ணு பிரசாத் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் நேபாளத்தின் முன்னாள் நிதி அமைச்சர் விஷ்ணு பிரசாத் பவுடல் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

முந்தைய அரசாங்கங்களின் ஊழல்களுக்கு எதிராக, தற்போதைய பிரதமர் பலேந்திர ஷா தலைமையிலான இளைய தலைமுறையினரின் ஆதரவுடனான அரசாங்கம் முன்னெடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கத்தில் முக்கியஸ்தராக விளங்கினார்.

இந்நிலையில், 66 வயதுடைய பவுடல், மேற்கு நேபாளத்திலுள்ள விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தீவிர போராட்டங்களை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.

இதன்போது ஏற்பட்ட வன்முறைகளைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் ஒலியும் அவரது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரும் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் ஊழலை ஒழிப்பதாக உறுதியளித்து ஆட்சியைப் பொறுப்பேற்ற 36 வயதுடைய ராப் பாடகரான தற்போதைய பிரதமர் பலேந்திர ஷா, கடந்த கால ஊழல்களுக்கு எதிராக இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button