
ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளதை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் ஈரானின் இராணுவத் திறன்களைக் குறைப்பதையும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதையும் நோக்கமாகக் கொண்டது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் கடலோரக் கண்காணிப்பு அமைப்புகள், வான் பாதுகாப்பு தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள் மற்றும் கடல்சார் சொத்துக்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இந்த தாக்குதல்களின்போது துறைமுகத்திலுள்ள கண்காணிப்பு கோபுரம் ஆகியவை சேதமடைந்ததாகவும், உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஜோர்தான், கட்டார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் வானூர்திகளை, ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகள்; மூலம் தாக்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
குவைத்திலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் ஈரானின் தாக்குதலில் சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2026, ஜூலை மாதம் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





