
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது ஆரம்பித்துள்ள வர்த்தகப் போர் இரண்டு நாடுகளின் வணிகங்களையும் பாதிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அதிலும், கனேடியப் பொருளாதாரம் கடுமையான மந்தநிலையைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா, கனடாவின் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் மீது 50 சதவீத வரியை விதித்துள்ளது.
ஜனவரி 1 முதல் அனைத்து சிற்றுந்து தயாரிப்புகள் மீதும் 50 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அதேநேரம், அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக, கனேடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), 700-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் பொருட்கள் மீது 15, 25 மற்றும் 50 சதவீத அடிப்படையில் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பதில் வரிகளை அறிவித்துள்ளார்.
கனடாவுன் இந்த வரிகள் எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் அமுலுக்கு வரவுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்காவை விடவும் கனடாவின் பொருளாதாரம் பத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளதாலும், தனது ஏற்றுமதியில் 70 சதவீதத்தை அமெரிக்காவிற்கே அனுப்புவதாலும் கனடா இந்த வர்த்தகப் போரால் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒன்ராறியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் நியூ பிரன்சுவிக் மாகாணங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர்.
இந்த வர்த்தகப் போரால் கனடாவில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்களின் வேலைகள் இழக்கப்படலாம் எனவும் ஆய்வாளர்கற் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கனடாவிற்கு எதிரான தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, ஒன்ராறியோ ஏரியை இனி அமெரிக்க அரசு “அமெரிக்கா ஏரி” என்று அழைக்கும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்குப் பிரதமர் மார்க் கார்னி மற்றும் மனிட்டோபா மாகாணத்தின் முதல்வர் வாப் கினேஆகியோர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.





