
குவைத் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடாத்தியுள்ளதாக
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஹைமார்ஸ் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் அவற்றின் வெடிமருந்து களஞ்சியங்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.

ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் இதனை உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், மூன்று எல்லை மையங்களும், கடல் கடந்த எண்ணெய் அகழ்வாராய்ச்சி தளம் ஒன்றும், சேதமடைந்துள்ளதாக குவைத் பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Follow Us





